செயற்கை காலுடன் நடைபழகிய ஒட்டகம்
செயற்கை காலுடன் நடைபழகிய ஒட்டகம்
பிரசுரிக்கப்பட்டது
இந்த ஒட்டகம் செயற்கை காலுடன் நடக்க கற்றுக்கொண்டது.
பாகிஸ்தானில் செயற்கை கால் பொருத்தப்பட்ட பெரிய விலங்கு இது என்று கால்நடை மருத்துவர் பாபர் ஹுசைன் தெரிவிக்கிறார்.
"காயம் குணமடைந்த பின் இந்த ஒட்டகம் செயற்கை காலை எவ்வாறு பயன்படுத்துவது என புரிந்துகொள்ள உதவுவது மிகப் பெரிய சவாலாக இருந்தது." என்கிறார் மூத்த கால்நடை மருத்துவர் பாபர் ஹுசைன்.
உணவு தேடி வழிதவறி சென்ற இந்த ஒட்டகத்தின் காலை நில உரிமையாளர் ஒருவர் துண்டித்ததாகக் கருதப்படுகிறது.
"செயற்கைக் காலுடன் இந்த ஒட்டகம் நடப்பதைப் பார்த்ததும் நான் அழ ஆரம்பித்தேன். ஒரு கனவு நனவாகியுள்ளது. இங்குள்ள அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர். இது நிரந்தரமாக காப்பகத்தில் இருக்கும்." என்றார் விலங்குகள் காப்பக மேலாளர் ஷீமா கான்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



