டேனியல் பாலாஜி: சித்தி தொடரில் அறிமுகி முக்கிய நடிகராக உருவெடுத்தது எப்படி?
‘வேட்டையாடு விளையாடு’, ‘காக்க காக்க’ உள்ளிட்ட திரைப்படங்கள் மூலமாக அறியப்பட்ட பிரபல நடிகர் டேனியல் பாலாஜி வெள்ளிக்கிழமை (மார்ச் 29) இரவு மாரடைப்பு காரணமாகக் காலமானார். அவருக்கு வயது 48. அவருடைய கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளன.
’சித்தி’ எனும் பிரபலமான தொலைக்காட்சி தொடர் மூலம் அறிமுகமானவர் டேனியல் பாலாஜி. பாலாஜி என்பதுதான் அவருடைய இயற்பெயர்.
ஆனால், சித்தி தொடரில் ‘டேனியல்’ எனும் கதாபாத்திரத்தில் நடித்ததால், டேனியல் பாலாஜி எனத் தன் பெயரை மாற்றிக்கொண்டார். இவர், 2003இல் ‘ஏப்ரல் மாதத்தில்’ எனும் திரைப்படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.
அதே ஆண்டில், கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘காக்க காக்க’ திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து காவல்துறை அதிகாரியாக நடித்துப் பிரபலமானார் டேனியல் பாலாஜி.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



