You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சபரிமலை கூட்ட நெரிசல்: உண்மையில் அங்கு என்ன பிரச்னை? சர்ச்சையாவது ஏன்?
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில், அரசு முறையான ஏற்பாடுகள் செய்யாததால் பெரும் கூட்ட நெரிசலில் சிக்கித்திணறி, 20 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்ததாக குற்றம்சாட்டுகின்றனர் பக்தர்கள்.
பக்தர்கள் போராட்டம், எதிர்க்கட்சிகள் விமர்சனம் என சபரிமலை விவகாரம் பேசுபொருளாகியுள்ளது. உண்மையில் அங்கு என்ன நடக்கிறது? என அறிய பிபிசி தமிழ் கள ஆய்வு மேற்கொண்டது.
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு, ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரியில் நடக்கும் மண்டல பூஜை, மகர ஜோதிக்காக லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வது வழக்கம். இந்தாண்டு தரிசனத்துக்காக நவம்பர் 16-ம் தேதி நடை திறக்கப்பட்ட நிலையில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
ஆனால், கூட்டத்தைக் கட்டுப்படுத்த கேரள அரசு மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியை சந்தித்துள்ளன, போதிய ஏற்பாடுகள் செய்யாமல் விட்டதால் கடும் சிரமத்துக்கு மத்தியில், நெரிசலில் சிக்கித்தவிப்பதாக பக்தர்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.
தரிசனத்துக்கான ஏற்பாடுகளில் கேரள கம்யூனிஸ்ட் அரசு தோல்வியை சந்தித்துள்ளதாக, காங்கிரஸ் மற்றும் பாஜக கடுமையான விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)