“விராட் கோலி தோற்றுவிடாதீர், என் இதயம் நொறுங்கிவிடும்” - பாகிஸ்தான் ரசிகை
“விராட் கோலி தோற்றுவிடாதீர், என் இதயம் நொறுங்கிவிடும்” - பாகிஸ்தான் ரசிகை
பிரசுரிக்கப்பட்டது
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இலங்கையின் பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா- இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன.
இந்நிலையில், இறுதிப்போட்டியை காண வந்த பாகிஸ்தானைச் சேர்ந்த ரசிகை ஒருவர், இப்போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்று தெரிவித்தார்.
பிபிசியிடம் பேசிய அவர், “நாங்கள் இறுதிப்போட்டிக்கு வரவில்லை என்றாலும் எங்களின் அண்டை நாட்டினர் வந்துள்ளனர். ஆட்டம் என்றால் நிச்சயம் ஹீரோ தேவை. எப்போதுமே ஹீரோவாக விராட் கோலி இருக்க வேண்டும். கோலி தயவுசெய்து தோற்று விடாதீர்கள். என் இதயம் நொறுங்கிவிடும்” என்று தெரிவித்தார். (முழு தகவல் காணொளியில்)

பட மூலாதாரம், AP
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



