தமிழ்நாடு: எந்தெந்த ஊர்களில் தேர்தல் புறக்கணிப்பு போராட்டங்கள் நடந்தன? ஏன்?
உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தல் இன்று இந்தியாவில் துவங்கியது. சுமார் 100 கோடி பேர் வாக்களிக்கப் போகும் இந்த பிரம்மாண்ட தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் நடந்து முடிந்தது.
இந்த தேர்தல் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவாக பார்க்கப்பட்டாலும் முக்கியமான பிரச்னைகளைக் குறிப்பிட்டு, தமிழ்நாட்டின் சில இடங்களில் தேர்தல் புறக்கணிப்புப் போராட்டங்கள் வெடித்தன.
சென்னையை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமையவிருக்கும் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராமத்தினர் தேர்தலைப் புறக்கணித்தனர். வேட்பாளர்களின் முகவர்கள்கூட பணிக்குச் செல்லவில்லை.
அந்த கிராமத்தில் வசிக்கும் தலையாரியை வாக்களிக்க வரும்படி தாசில்தார் கட்டாயப்படுத்தியதாக குற்றம்சாட்டிய அங்குள்ள மக்கள், தாசில்தாரிடமும் கடுமையாக வாக்குவாதம் செய்தனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



