அதானி நிறுவன பங்கு விற்பனை - கடைசி நேரத்தில் மாறிய முடிவு

காணொளிக் குறிப்பு, ஹிண்டன்பர்க் விளைவு: அதானி எஃப்.பி.ஓ. பங்கு விற்பனை வாபஸ் - சொன்ன காரணம் என்ன?
அதானி நிறுவன பங்கு விற்பனை - கடைசி நேரத்தில் மாறிய முடிவு
பிரசுரிக்கப்பட்டது

கடந்த ஜனவரி 27ம் தேதி அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் எஃப்.பி.ஓ. பங்கு விற்பனையைத் தொடங்குவதாக அந்நிறுவனம் திட்டமிட்டிருந்தது.

ஃபாலோ ஆன் பப்ளிக் ஆஃபர்(FPO) மூலமாக 20,000 கோடி ரூபாய் திரட்டும் வேலையில் இறங்கியிருந்த அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம், அந்த முடிவை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

பங்கு வாங்குவதற்காகப் பணம் செலுத்திய அனைவருக்கும் பணம் திரும்ப வழங்கப்படும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் 'ஃபாலோ ஆன் பப்ளிக் ஆஃபர்' திரும்பப்பெறப்பட்டது குறித்து வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்தார் அந்தக் குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி.

அதானி

பட மூலாதாரம், Getty Images

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: