பாகிஸ்தானில் கனமழை, வெள்ளம் - 63 பேர் பலி
பாகிஸ்தானில் கனமழை, வெள்ளம் - 63 பேர் பலி
பிரசுரிக்கப்பட்டது
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கனமழை பெய்து வருகிறது.
செவ்வாய்க்கிழமை முதல் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக குறைந்தது 63 பேர் உயிரிழந்ததாகவும், 290 பேர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது. சக்வால் நகரில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அணை இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராவல்பிண்டியில் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்க ராணுவம் வரவைக்கப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



