காஸாவில் போர் நிறுத்தம் எப்போது? டிரம்ப் பதில்!
காஸாவில் போர் நிறுத்தம் எப்போது? டிரம்ப் பதில்!
பிரசுரிக்கப்பட்டது
கடந்த சில நாட்களில் நெதன்யாகு உடனான உங்கள் சந்திப்பு எப்படி இருந்தது? இந்த வாரம் போர் நிறுத்தம் ஏற்படுவது யதார்த்தமானதாக இருக்கிறதென நினைக்கிறீர்களா? என்று ஊடகவியலாளர் ஒருவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் கேள்வி ஒன்றை எழுப்பினார். அதற்கு டிரம்ப் அளித்த பதில் என்ன? காணொளி இங்கே!
இதற்கு பதில் அளித்த டிரம்ப், நாங்கள் காஸாவைப் பற்றி பெரும்பாலும் பேசினோம். இந்த வாரம் அல்லது அடுத்த வாரம் ஒரு வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறேன். இது நிச்சயமில்லை. போர், காஸா மற்றும் நாங்கள் அதிகம் தொடர்பில் இருக்கும் விஷயங்கள் பற்றி எதுவும் உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால், இந்த வாரத்திலோ அல்லது அடுத்த வாரத்திலோ எதாவது ஒரு சமாதானம் அல்லது ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளன என்று கூறினார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



