இலங்கையை கலங்கடித்த இந்திய பந்துவீச்சாளர்கள்
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை திணறடித்த இந்திய பந்துவீச்சாளர்கள் 55 ரன்களில் அனைவரையும் ஆட்டமிழக்க செய்தார். உலகக் கோப்பை போட்டியிலேயே மிக மோசமான தோல்வியை இலங்கை கண்டது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் ஆசிய கோப்பை போட்டியில் இலங்கை இந்தியாவின் ஆட்டத்துக்கு சுருண்டது. தற்போது அதை விட மோசமான தோல்வியை தழுவியுள்ளது இலங்கை.
முகமது சிராஜ், முகமது ஷபி, பும்ரா உள்ளிட்டோரின் பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் இலங்கை அணி திணறியது. முதல் ஓவரிலேயே விக்கெட்டுகள் விழ ஆரம்பித்தன. மூன்று ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகள் இழந்து மிக மோசமான நிலையில் ஆட்டத்தை தொடங்கியது இலங்கை. இது உலகக் கோப்பை போட்டியிலேயே எடுக்கப்பட்ட குறைந்த ரன்கள் ஆகும்.
இந்த போட்டிக்கு முந்தைய நாள், இலங்கை அணியின் பயிற்றுநர் சில்வர்வுட் ஆசிய கோப்பை தோல்வியிலிருந்து இலங்கை தனது பாடங்களை கற்றுக் கொண்டதால் இந்த முறை இந்திய அணிக்கு சவாலாக இருக்கும் என்றார். ஆனால் அவரது எதிர்பார்ப்புகள் பொய்யானது.
முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச தேர்ந்தெடுத்தது. எட்டு விக்கெட்டு இழப்புக்கு 357 ரன்களை இந்தியா எடுத்திருந்தது. தனி நபர் யாரும் சதம் அடிக்காமல் ஒரு அணியாக இவ்வளவு ரன்கள் சேர்த்தது, உலகக் கோப்பையில் இதுவே அதிகமாகும்.

பட மூலாதாரம், Getty Images
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



