அமெரிக்காவில் 6 மணி நேரத்தில் இளைஞரின் உயிரை குடித்த 'செக்ஸ்டார்ஷன்' - என்ன நடந்தது?

அமெரிக்காவில் 6 மணி நேரத்தில் இளைஞரின் உயிரை குடித்த 'செக்ஸ்டார்ஷன்' - என்ன நடந்தது?
பிரசுரிக்கப்பட்டது

ஜென் பியூட்டாவின் மகன் ஜோர்டன், மகிழ்ச்சியான ஒரு 17 வயது பள்ளி மாணவர்.

ஜோர்டன் செக்ஸ்டார்ஷன் எனப்படும் பாலியல் ரீதியாக மிரட்டி பணம் பறிக்கும் கும்பலின் இலக்குக்கு ஆளானார். அவரது வயதையொத்த பெண்ணாக நடித்து, அவருடைய அந்தரங்க புகைப்படங்களை அனுப்ப வைத்துள்ளனர். பின்னர் அந்த புகைப்படங்களை பகிராமல் இருக்க ஜோர்டானிடம் பணம் கேட்டுள்ளனர்.

அமெரிக்க குற்ற வழக்குகளின் புள்ளிவிவரங்களின்படி, இத்தகை செக்ஸ்டார்ஷன் வழக்குகள் கடந்தாண்டு இரட்டிப்பாகியுள்ளன. கடந்த 2 ஆண்டுகளில் இளம் வயது ஆண்கள் 27 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். செக்ஸ்டார்ஷன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஜென் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இத்தகைய மோசடிகளில் ஈடுபடும் பெரும்பாலானோர் நைஜீரியாவை தளமாக கொண்டு செயல்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த சகோதரர்கள் இருவரும் ஜோர்டன் மற்றும் மற்ற சிறுவர்களை இலக்கு வைத்ததாக ஒப்புக்கொண்டுள்ளனர். சாமுவேல் ஒகோஷி மற்றும் சாம்சன் ஒகோஷி இருவரும் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். கடந்தாண்டு இத்தகைய மோசடிகளில் ஈடுபடுவோரை நைஜீரியா குறிவைக்கத் துவங்கியது.

“இணைய மோசடி” வழக்கில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தகைய வழக்குகள் அதிகரித்து வருவதாக காவல்துறை ஒப்புக்கொண்டுள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)