You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டம்
அமெரிக்காவின் பல முக்கிய பல்கலைக்கழகங்களிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
காஸாவின் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் போரை எதிர்த்தும், இஸ்ரேலுடன் தொடர்புள்ள நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களைப் புறக்கணிக்கக் கோரியும் அமெரிக்கா முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவின் 20க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக, கல்லூரி வளாகங்களில் மாணவர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதனால், பல முக்கியப் பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இது அமெரிக்காவின் உயர்கல்வி வளாகங்களைப் புரட்டிப் போட்டுள்ளது.
முழுமையான விவரங்களை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)