கழிவறைக்கு கீழே மது பாட்டில்கள் - ரகசிய அறை கண்டுபிடிப்பு

கழிவறைக்கு கீழே மது பாட்டில்கள் - ரகசிய அறை கண்டுபிடிப்பு
பிரசுரிக்கப்பட்டது

குஜராத்தில் ஒரு வீட்டினுள்ளே கழிவறைக்கு கீழே ரகசிய அறையில் இருந்து மதுபானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த வீட்டின் சுவற்றுக்குள் இருந்தும் மதுபான பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன.

மொத்தமாக 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 792 மதுபான பாட்டில்கள் இந்த வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை அகமதாபாத் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்துவருகிறது.

குஜராத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு