You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காலநிலை மாற்றத்தால் உணவு கிடைக்காமல் தவிக்கும் பனிக் கரடிகள் - காணொளி
காலநிலை மாற்றத்தால் வெயில் காலம் அதிகமாவதால் பனிக்கரடிகள் அதிகம் பாதிக்கப்ட்டுள்ளன.
பனியை நம்பி வாழும் பனிக்கரடிகள் அதன் மூலமே வேட்டையாடுதல், வாழ்க்கையை நடத்துதல் போன்ற அன்றாட பணிகளில் ஈடுபட்டுள்ளன. ஆனால், அவற்றிற்கு காலநிலை மாற்றம் புதிய அச்சுறுத்தலாக வந்துள்ளது.
காலநிலை மாற்றத்தால் வெப்பமான நாட்கள் அதிகமாவதால் பனி இல்லாமல் இருக்கும் நாட்கள் அதிகமாகி விடுகிறது. இந்நிலையில் உணவு கிடைக்காமல் இந்த கரடிகள் தவித்து வருகின்றன.
இந்த காலத்தில் மட்டும் இவை அதிக எடையை இழக்கின்றன. இவற்றில் சில இறந்தும் கூட போகின்றன. கோடைக் காலத்தில் இவை எப்படி வாழ்கின்றன, உணவு உண்கின்றன என்பதை கண்காணிக்க இவற்றின் கழுத்தில் கேமரா பொருத்திய காலரை ஆய்வாளர்கள் மாட்டி விட்டனர்.
அதன் மூலமே இந்த தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
முழு விவரம் காணொளியில்...
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)