சுற்றுலா பயணிகளுக்காக காத்திருக்கும் 3000 யானைகள் - காணொளி
கோவிட் தொற்றுக்கு பிறகு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்காத நிலையில், தாய்லாந்தில் யானைகள் சுற்றுலா தொழில் மிகவும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. தாய்லாந்தில் உள்ள 3000 யானைகளும் அதன் உரிமையாளர்களும் இயல்பு நிலைக்கு சுற்றுலாத்துறை திரும்பும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தாய்லாந்தின் வடகிழக்கு பகுதிகளில் வாழும் இந்த மக்களுக்கும் யானைகளுமான தொடர்பு பல தலைமுறைகளாக நீடித்து வருகிறது. தாய்லாந்தில் கோவிட் தொற்றுக்கு பிறகு சுற்றுலாத்துறை இப்போது தான் பழைய நிலைக்கு திரும்பத் தொடங்கி இருக்கிறது.
ஆனால் யானைகள் கட்டி வைத்து வளர்ப்பது, யானைகள் மீது மனிதர்கள் மேற்கொள்ளும் சவாரி குறித்து எழுந்துள்ள எதிர்மறை விவாதங்கள் காரணமாக சுற்றுலா பயணிகள் எண்ணிகை மீண்டும் பழைய நிலையை எட்டுமா என யானைகளின் உரிமையாளர்கள் கவலை கொண்டுள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



