இரான் விவகாரம்: மத்தியஸ்தம் செய்வதாக கூறிய புதின் - 'நோ' சொன்ன டிரம்ப்

இரான் விவகாரம்: மத்தியஸ்தம் செய்வதாக கூறிய புதின் - 'நோ' சொன்ன டிரம்ப்
பிரசுரிக்கப்பட்டது

ரஷ்ய அதிபர் புதினுடன் தான் தொலைபேசியில் பேசியது குறித்து நேற்று (ஜூன் 18) செய்தியாளர்களுக்கு விளக்கமளித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "இன்னொரு விஷயமும் இருக்கிறது. ரஷ்யா யுக்ரேன் விவகாரம் முட்டாள்தனமானது. நான் அதிபராக இருந்திருந்தால், இது ஒருபோதும் நடந்திருக்காது" என்று கூறினார்.

மேலும் அவர், "நான் அதிபராக இருந்திருந்தால், புதின் இதைச் செய்திருக்க மாட்டார். நேற்று அவருடன் பேசினேன். அவர் மத்தியஸ்தம் செய்ய விருப்பம் தெரிவித்தார். முதலில் ரஷ்யா விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யுங்கள்.

மற்றவற்றைப் பற்றி பிறகு கவலைப்படலாம் எனக் கூறினேன். நிலைமை சரியாகிவிடும் என நினைக்கிறேன். ஆனால், அதிக மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், பதிவு செய்யப்பட்டதைவிட அதிக மக்கள் இறந்துள்ளனர்" என்று குறிப்பிட்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு