சுபான்ஷு சுக்லா: சர்வதேச விண்வெளி நிலையத்தில் முதல் இந்தியர்

காணொளிக் குறிப்பு,
சுபான்ஷு சுக்லா: சர்வதேச விண்வெளி நிலையத்தில் முதல் இந்தியர்
பிரசுரிக்கப்பட்டது

ஆக்ஸியம்-4 திட்டத்தின் கீழ் இந்தியாவைச் சேர்ந்த சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்றார். அவர் உள்பட 4 விண்வெளி வீரர்களுடன் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலத்தை சுமந்து கொண்டு ஃபால்கன்-9 ராக்கெட் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து நேற்று (ஜூன் 25) இந்திய நேரப்படி நண்பகல் 12:01 மணியளவில் புறப்பட்டுச் சென்றது.

இந்நிலையில், ஆக்ஸியம் 4 திட்டத்தின் டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் ஜூன் 26ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 4 மணிக்கு இணைந்தது. இதையடுத்து, சர்வதேச விண்வெளி நிலையத்துக்குள் சுபான்ஷு சுக்லா உள்பட 4 விண்வெளி வீரர்களும் நுழைந்தனர்.

இதன் மூலம், இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்ற முதல் இந்தியர் என்ற பெயரைப் பெற்றுள்ளார்.

அவரது இந்தப் பயணம் இஸ்ரோவின் விண்வெளி உயிரியல் மற்றும் விண்வெளி விவசாய ஆராய்ச்சிக்கு ஒரு திருப்புமுனையாக அமையும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு