அமெரிக்கா: ஃப்ளோரிடா மக்களை புரட்டி எடுக்கும் மில்டன் சூறாவளி
மில்டன் சூறாவளி அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தை தாக்கி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. ஃப்ளோரிடாவில் முப்பது லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் மற்றும் வணிக இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன.
மேற்கு கடற்கரையில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில், தண்ணீர் விநியோகம் துண்டிக்கப்பட்டது. அதே நேரத்தில் ஃப்ளோரிடாவில் வரும் நாட்களில் மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என அம்மாகாண ஆளுநர் ரான் டிசாண்டிஸ் தெரிவித்துள்ளார்.
"சில வாரங்களுக்கு முன்பு ஃப்ளோரிடாவை தாக்கிய ஹெலன் சூறாவளியினால் ஏற்பட்ட பாதிப்பை விட தற்போது ஏற்பட்டிருப்பது 'மோசமான சூழ்நிலை அல்ல', என்றும் ஆளுநர் ரான் டிசாண்டிஸ் கூறினார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



