ஜப்பான் விமர்சனம்: கார்த்தி, ராஹுமுருகன் கூட்டணி சாதித்ததா? சோதித்ததா?
தீபாவளியை முன்னிட்டு ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி, அனு இம்மானுவேல் நடித்திருக்கும் `ஜப்பான்` திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.
மேலும் இதில், ஜெய்லர் படத்தில் நடித்த தெலுகு நடிகர் சுனில், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், எழுத்தாளர் பவா செல்லதுரை, ஜித்தன் ரமேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படம் நடிகர் கார்த்திக்கு வெற்றிப் படமாக அமைந்துள்ளதா? ரசிகர்களின் வரவேற்பு எப்படி இருந்தது?
கார்த்தி நடிப்பில் கடந்த 2 ஆண்டுகளில் வெளியான விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய படங்கள் வணிகரீதியாக பெரிய வெற்றிகளைப் பெற்றுள்ளன.
இந்த நிலையில் ராஜு முருகனோடு ஜப்பான் படத்தில் கார்த்தி ஜோடி சேர்ந்திருப்பது அனைவர் மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் யாரும் எதிர்பார்க்காத வகையில் கமெர்சியல் ஹீரோவான கார்த்தியோடு ராஜுமுருகன் சேர்ந்த ஜப்பான் படத்தின் அறிவிப்பு வெளியானது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



