நிலவை நெருங்கியதும் விக்ரம் லேண்டர் செய்த முதல் காரியம் என்ன தெரியுமா?

நிலவை நெருங்கியதும் விக்ரம் லேண்டர் செய்த முதல் காரியம் என்ன தெரியுமா?
பிரசுரிக்கப்பட்டது

சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து ஆகஸ்ட் 17ஆம் தேதியன்று நிலவின் சுற்றுவட்டப்பாதையில் உந்துவிசைத் தொகுதியில் இருந்து விக்ரம் லேண்டர் தொகுதிவெற்றிகரமாகப் பிரிந்தது.

விக்ரம் லேண்டர் பிரிந்த சிறிது நேரத்திற்கு உள்ளாகவே, லேண்டரில் இருந்த லேண்டர் இமேஜர் கேமரா நிலவை புகைப்படம் எடுத்தது. அந்தப் புகைப்படங்களை இஸ்ரோ தனது எக்ஸ் சமூக ஊடக பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளது.

முன்னதாக, லேண்டர் பொசிஷன் டிடெக்ஷன் கேமரா (Lander position detection camera) மூலம் ஆகஸ்ட் 15ஆம் தேதி எடுக்கப்பட்ட நிலவின் படங்களையும் இன்றைய தினம் இஸ்ரோ வெளியிட்டது.

பிரக்யான் ரோவர் அடங்கிய விக்ரம் லேண்டர் தொகுதி தற்போது நிலவில் தரையிறங்குவதற்கான அதன் இறுதிக்கட்டத்தை நோக்கிப் பயணிக்கிறது.

ஆகஸ்ட் 23ஆம் தேதியன்று அது நிலவில் மென்மையாகத் தரையிறங்கும் என கணிக்கப்படுகிறது.

இதுவரை நிலவின் தென் துருவத்தில் எந்த நாடும் கால்பதித்ததில்லை எனும் சூழலில், ஒரு வரலாற்றுச் சாதனையை படைக்கும் முனைப்பில் இஸ்ரோ உள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: