You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நீலகிரி கோவிலில் பக்தர்களைக் கவரும் இயந்திர யானை – காணொளி
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள தேவர் சோலை சிவன் கோவிலில், இயந்திர யானை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அங்கே உயிருள்ள யானைக்குப் பதிலாக இந்த இயந்திர யானையை முன்னிறுத்தியே பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன.
கேரளாவை பூர்வீகமாக கொண்ட கனடாவில் வசிக்கும் சங்கீதா என்பவர், 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இந்த இயந்திர யானையை கோவிலுக்கு பரிசாக வழங்கியுள்ளார்.
பார்ப்பதற்கு உயிருள்ள யானை போல் வடிவமைக்கப்பட்டு உள்ள இந்த யானையின் காதுகளும், கண்களும் அசைகின்றன. வால் அசைவதுடன், தும்பிக்கையை மடக்கி நீரையும் இந்த இயந்திர யானை பீய்ச்சி அடிக்கிறது.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் இதனை வியப்புடன் பார்ப்பதுடன், இயந்திர யானையைத் தொட்டும் வணங்குகின்றனர். சிறுவர்கள் பயம் கலந்த மகிழ்ச்சியுடன் யானையைத் தொட்டுப் பார்க்கின்றனர். பலரும் ஆர்வமிகுதியில் இயந்திர யானையுடன் செல்பி எடுத்துக் கொள்கின்றனர்.
கோவிலில் உயிருள்ள யானைகளை வைத்து என்னென்ன பூஜைகள் செய்யப்படுமோ, அவை அனைத்தும் இந்த இயந்திர யானையை வைத்தும் பூஜைகள் நடத்தப்படுகின்றன. இரும்பு மற்றும் பைபர் கொண்டு, 900 கிலோவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த இயந்திர யானைக்கு, ஹரிஹரன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)