You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வினேஷ் போகாட்: "பிரிஜ் பூஷண் பற்றி பிரதமர் மோதியிடம் முன்பே புகார் சொன்னேன்"
பிரிஜ் பூஷண் சரண் சிங் தொடர்பான புகார்களை பிரதமர் நரேந்திர மோதியிடம் குறிப்பிட்டதாக, பிபிசி உடனான உரையாடலில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் கூறினார்.
அமைச்சரை சந்தித்த போது தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக வினேஷ் கூறினார். மேற்பார்வை குழுவின் உறுப்பினர்களைத் தொடர்பு கொள்வது சவாலாக மாறியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும் `மேரி கோமை குழுவின் தலைவராக நியமிப்பதற்கு முன்பு, அவர் இதற்கு தயாராக இருக்கிறாரா என்று ஏன் கேட்கவில்லை` என்றும் வினேஷ் போகாட் கேள்வி எழுப்பினார். "சர்வதேச விளையாட்டு போட்டிகள் அடுத்தடுத்து வரவிருக்கின்றன, இந்த நிலையில் விளையாட்டு வீரர்கள் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள், இது யாருடைய காதுகளிலாவது விழுகிறதா இல்லையா" என்று வினேஷ் கேள்வி எழுப்புகிறார்.( முழு தகவல் காணொளியில்)
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்