You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சௌதி அரேபியாவில் அரங்கம் அதிர புதிய அவதாரம் எடுத்த ரொனால்டோ
சௌதி அரேபியாவில் அரங்கம் அதிர புதிய அவதாரம் எடுத்த ரொனால்டோ
பிரசுரிக்கப்பட்டது
கால்பந்து வரலாற்றில் சாதனை அளவாக, உச்சபட்ச ஆண்டு ஊதியத்துடன் சௌதி அரேபிய அணியில் இணைந்துள்ள நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஐரோப்பாவில் அனைத்தையும் சாதித்துவிட்டதாக பெருமிதம் தெரிவித்துள்ளார். ஐரோப்பாவில் இன்றும் பல அணிகள் தன்னை சேர்த்துக் கொள்ள தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார். உலகமே கொண்டாடிய உலகக்கோப்பை கால்பந்து திருவிழா கத்தாரில் கோலாகலமாக நடந்து கொண்டிருந்த வேளையிலேயே, மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து ரொனால்டோ விலகப் போவதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்தன. மான்செஸ்டர் யுனைடெட் அணியை விமர்சித்து அவர் அளித்த பேட்டியே இதற்குக் காரணம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்