You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஓடோடி வந்த தமிழக மக்கள்
சமீபத்தில் இயற்கை எய்தியுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்த தமிழகம் முழுவதிலும் இருந்து மக்கள் சென்னை வந்துள்ளனர்.
தேமுதிக தலைவரும், முன்னாள் நடிகருமான விஜயகாந்த் அவர்கள் சமீபத்தில் உடல்நல குறைபாடால் மறைந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் சென்னை வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தி சென்றுள்ளனர்.இதற்காக விருதுநகர், திருப்பூர், கும்மிடிபூண்டி என பல பகுதிகளில் இருந்து மக்கள் வந்துள்ளனர்.
இது குறித்து அவர்களிடம் கேட்கும்போது, எம்ஜிஆர் போல ஒரு சிறந்த தலைவர் விஜயகாந்த். அவரின் உதவும் குணம் தங்களுக்கு பிடிக்கும். அவர் போல் ஒரு சிறந்த தலைவர் இல்லை என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)