‘ஆணாக உணர்ந்ததை வீட்டில் சொன்னதும் கொல்லப் பார்த்தார்கள்’ - காணொளி

காணொளிக் குறிப்பு, ‘ஆணாக உணர்ந்ததை வீட்டில் சொன்னதும் கொல்லப் பார்த்தார்கள்’
‘ஆணாக உணர்ந்ததை வீட்டில் சொன்னதும் கொல்லப் பார்த்தார்கள்’ - காணொளி
பிரசுரிக்கப்பட்டது

மனோஜ் பிறக்கும்போது பெண்ணாக அடையாளப்படுத்தப்பட்டவர். 17 வயதில் மனோஜ் தனது பெற்றோரிடம் சென்று தன்னை ஆணாக உணர்வதாகவும் ஒரு பெண்ணை விரும்புவதாகவும் கூறியபோது அவர்களது வீட்டில் களேபரமே நடந்துவிட்டது.

தனது விருப்பத்தை பெற்றோர் ஏற்க மறுத்து கை, கால்களை கட்டிப்போட்டு கடுமையாக தாக்கியதாக மனோஜ் கூறுகிறார்.

அவரை வீட்டின் ஒரு மூலையில் அடைத்து வைத்ததோடு, "கொலை செய்துவிடுவேன்" என்றும் அவரது அப்பா மிரட்டியுள்ளார்.

தற்போது, 22 வயதாகும் மனோஜ் தனது காதலி ராஷ்மியுடன் ஒரு பெரிய நகரத்தில் ஒளிந்து வாழ்ந்து வருகிறார். திருமணம் செய்து கொள்வதற்கான சட்டப்பூர்வ உரிமை கோரிய மனு மீதான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அவர்கள் இருவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். (முழு தகவல் காணொளியில்)

திருநம்பி

பட மூலாதாரம், Getty Images

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: