You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்ட ஜெர்மனியின் பழைய பாலம்
வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்ட ஜெர்மனியின் பழைய பாலம்
பிரசுரிக்கப்பட்டது
ஜெர்மனியின் 55 ஆண்டுகள் பழமையான பாலம், உள்ளூர் நேரப்படி காலை 11 மணிக்கு தகர்க்கப்பட்டது.
இத்தகைய கட்டுமானங்களை இடிப்பதில் நிபுணத்துவம் பெற்ற மைக்கேல் ஸ்னேய்டெர் மிகவும் கச்சிதமாக பாலத்தை வெடிகுண்டு மூலம் தகர்த்தபோது அதன் 16 தூண்கள் அப்படியே வளைந்து அதன் இடிபாடுகள் சாலையின் மீது விழுந்தன.
இத்தனை பெரிய சம்பவம் நடந்தபோதும், பாலத்தை அடுத்த பகுதியில் இருந்த மாற்று பாலத்திற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை.
இந்த மாற்றுப் பாலம் 2021ஆம் ஆண்டு டிசம்பரில் திறக்கப்பட்டது. அறிவியல், துல்லிய திட்டமிடலுக்கு சான்று கூறும் இந்த நிகழ்வை ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்து வியந்தனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்