பட்டியல் பிரிவு மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை போராடி மீட்ட பெண்கள் - காணொளி
பட்டியல் பிரிவு மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை போராடி மீட்ட பெண்கள் - காணொளி
பிரசுரிக்கப்பட்டது
விவசாயம் செய்யும் உரிமை கேட்டு நீண்ட காலம் போராடியவர்கள் இவர்கள்.
பஞ்சாப் மாநிலம் சங்ரூர் மாவட்டத்தின் காரச்சோன் கிராமத்தைச் சேர்ந்த சரண்ஜித் கவுர் மற்றும் ராஜ் கவுர் ஆகிய இருவரும் தங்களது கிராமத்தில் பட்டியல் பிரிவு மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்களில் விவசாயம் செய்யும் உரிமை கேட்டு நீண்ட காலம் போராடியவர்கள்.
விவசாயத் தொழிலாளிகளான இவர்கள் இருவரும் மக்களோடு மக்களாக நின்று போராட்டங்களை தலைமையேற்று நடத்தி சட்டப்படி விவசாய நிலங்களை குத்தகைக்கு எடுத்துள்ளனர்.
இதற்காக அவர்கள் எத்தனை ஆண்டுகளாக போராடினார்கள், என்ன மாதிரியான சவால்களை சந்தித்தார்கள் என்ற விவரங்களை இந்த காணொளியில் காணலாம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



