ஆலப்புழாவில் படகுப்போட்டி கோலாகலம்
ஆலப்புழாவில் படகுப்போட்டி கோலாகலம்
பிரசுரிக்கப்பட்டது
கேரள மாநிலம் ஆலப்புழாவில் சனிக்கிழமை நேரு கோப்பை படகுப் போட்டி நடைபெற்றது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 'நடுபாகம் சுண்டன்' என்ற அணியை வெறும் 120 மில்லி விநாடிகள் வித்தியாசத்தில் முந்திச் சென்று 'அரோமா சுண்டன்' என்ற அணி கோப்பையைக் கைப்பற்றியது.
வெற்றி பெற்ற அணிக்கு 25 லட்சம் ரூபாய்க்கான காசோலை பரிசாக வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையன்று நடைபெறும் இந்தப் போட்டி நடைபெறுகிறது.
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆலப்புழாவிற்கு வருகை தந்ததையும், ஏரியில் அவர் படகு சவாரி செய்ததையும் நினைவுகூரும் வகையில் 1952-ஆம் ஆண்டில் இந்தப் போட்டி தொடங்கப்பட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



