காணொளி: ஸ்மிருதி மந்தனாவை திருமணம் செய்யவுள்ள நபர் யார்?

காணொளி: ஸ்மிருதி மந்தனாவை திருமணம் செய்யவுள்ள நபர் யார்?
பிரசுரிக்கப்பட்டது

இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா யாரை திருமணம் செய்ய போகிறார் தெரியுமா?

ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் நவம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது.

உலகக் கோப்பை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற ஸ்மிருதி மந்தனா பாலாஷ் முச்சால் என்பவரை திருமணம் செய்ய உள்ளார். பாலாஷ் முச்சால் இசையமைப்பாளர், பாடகர் மற்றும் பாடலாசிரியர் ஆவார்.

பாலாஷ், ஸ்மிருதியிடம் திருமணம் செய்துகொள்ளலாமா எனக் கேட்டதன் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்திய அணி உலகக் கோப்பை வென்ற போது இவர்கள் இருவரும் கோப்பையுடன் காணப்பட்டனர். இதுகுறித்த புகைப்படத்தையும் பாலாஷ் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த படத்தில் ஸ்மிருதி மற்றும் பாலாஷ் இருவரும் கோப்பையுடன் இருந்தனர்.

இவர்களின் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இது குறித்து ஸ்மிருதியின் நண்பரும் இந்திய வீராங்கணையுமான ஜெமிமா சில புகைப்படங்கள் வீடியோக்களை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் மற்ற வீராங்கனைகளுடன் நடனம் ஆடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு