You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
திகார் சிறையில் போலீஸ் கண் முன்னே கைதி கொலை- நடந்தது என்ன?
டெல்லியில் உள்ள திகார் சிறையில் தில்லு தாஜ்புரியா என்ற கைது போலீஸ் கண் முன்னே சக கைதிகளால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தின்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த தமிழ்நாடு சிறப்பு காவல் படையைச் சேர்ந்த காவலர்கள் ஏழு பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். என்ன நடந்தது?
கொலை நடந்த நேரத்தில் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் சம்பவத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றதாகக் கூறி அவர்கள் தமிழ்நாட்டிற்குத் திரும்புமாறு உத்தரவிடப்பட்டதாக இந்தச் சம்பவம் குறித்து சிறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
டெல்லி சிறைச்சாலைகளின் இயக்குநர் ஜெனரல் சஞ்சய் பேனிவால், சிறை பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு காவல்துறைக்கு கடிதம் எழுதிய சில நாட்களுக்குள் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
33 வயதான தில்லு தாஜ்புரியா திகார் சிறைக்குள் போட்டி குற்றச்செயல் குழுவைச் சேர்ந்த சில கைதிகளால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் சிறைக்குள் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவத்தின்போது, சிறை பணியில் இருந்த தமிழ்நாடு சிறப்புக் காவல் படையின் காவலர்கள் அலட்சியமாக இருந்ததாகக் கூறியதோடு, இதுகுறித்து தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளுடன் ஒரு கூட்டமும் நடத்தப்பட்டது. ( முழு தகவல் காணொளியில்)
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்