You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விடுதலை 2: படம் குறித்து ரசிகர்கள் கூறுவது என்ன?
ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விடுதலை 2 படம் வெளியாகியுள்ளது. டிசம்பர் 20ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியான இந்த படத்தில் நாயகனாக நடித்துள்ளார் விஜய் சேதுபதி. அவரோடு நடிகை மஞ்சு வாரியர், நடிகர்கள் அனுராக் கஷ்யப், சூரி, கிஷோர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படத்தை இயக்கி உள்ளார் வெற்றிமாறன்.
ஏற்கனவே விடுதலை பாகம் ஒன்று மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், இரண்டாம் பாகத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தாரா இயக்குநர் வெற்றிமாறன்.
சிறப்பு காட்சிகளை பார்த்த பிறகு ரசிகர்கள் கூறுவது என்ன? முழுவிபரமும் இந்த வீடியோவில்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)