You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உலகக்கோப்பை அரையிறுதியில் இந்தியா, நியூசிலாந்து மோதுமா?
புள்ளிப்பட்டியலில் நியூசிலாந்து அணி இலங்கையுடனான வெற்றியைத் தொடர்ந்து 2 புள்ளிகள் கூடுதலாகப் பெற்று மொத்தம் 10 புள்ளிகளுடன் 4வது இடத்தை வகிக்கிறது. நியூசிலாந்தின் நிகர ரன்ரேட்டும் 0.398இல் இருந்து 0.743 ஆக உயர்ந்துள்ளது.
பாகிஸ்தான் அணிக்கு இன்னும் ஒரேயொரு ஆட்டம் மட்டுமே எஞ்சியுள்ளது. சனிக்கிழமை இங்கிலாந்தை எதிர்த்து அந்த அணி விளையாடுகிறது. ஆனால், அரையிறுதிக்குள் நுழைய பாகிஸ்தானுக்கு வெற்றி மட்டுமே போதாது.
ஏனெனில், அந்த அணியின் நிகர ரன்ரேட் 0.036 மட்டுமே. ஈ.எஸ்.பி.என் கிரிக்இன்ஃபோ தரவுகளின்படி, இங்கிலாந்தை 300 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினால் மட்டுமே பாகிஸ்தான் நிகர ரன்ரேட்டில் பெரிய மாறுதலை ஏற்படுத்தி அரையிறுதிக்குள் நுழைய முடியும். ஆனால் இது நடப்பதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)