You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கேலிகளை கடந்து 70 வயதில் தினமும் குதிரை சவாரி செய்யும் பெண் விவசாயி
இவர் விவசாயி லஹனாபய் கவ்ஹானே. இது அவருடைய பெண் குதிரை சோனி. லஹானாபாய் 70 வயதை கடந்துவிட்டார். தன் தினசரி பயணங்களுக்கு குதிரையில்தான் அவர் சவாரி செய்கிறார். மகாராஷ்டிராவின் கார்த்தேல் கிராமத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் மலைப்பகுதியில் தன் கணவருடன் அவர் வசித்துவருகிறார். இந்த குதிரையை அவர் 5,000 ரூபாய்க்கு வாங்கினார்.
கடந்த 7-8 ஆண்டுகளாக லஹனாபாய் இந்தக் குதிரையை வைத்திருக்கிறார். இவருடைய குடும்பத்திற்கு சொந்தமாக 18 ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது. அதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் 2 லட்ச ரூபாய் வருமானம் வருகிறது. அவருடைய பிள்ளைகள் இருவரும் பணிபுரிந்து வருகின்றனர்.
அவருடைய வீட்டுக்கு செல்ல சரியான பாதை இல்லாததால், இந்தக் குதிரை அவருக்கு மிகவும் உதவியாக இருக்கிறது.
லஹானாபயின் இந்த வெளிப்படையான குணத்தை மற்றவர்கள் கேலி செய்கின்றனர். ஆனால், அவற்றை லஹனாபய் கண்டுகொள்வதில்லை.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)