காஸாவில் உணவுப் பற்றாக்குறை - நிவாரண லாரியை முற்றுகையிடும் மக்கள்

காஸாவில் உணவுப் பற்றாக்குறை - நிவாரண லாரியை முற்றுகையிடும் மக்கள்
பிரசுரிக்கப்பட்டது

காஸாவில் உணவுக்காக அலைமோதும் மக்கள் குறித்த வீடியோ பலரையும் உலுக்கியுள்ளது.

அக்டோபர் 7 போர் தொடங்கியதில் இருந்து காஸாவில் உணவு தட்டுப்ப்பாடும் தொடங்கி விட்டது. இது வரை 22 லட்சம் மக்கள் பசி, பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐநா அமைப்பு கூறியுள்ளது.

காஸா மக்களுக்கு அடிப்படை உணவான மாவும், தண்ணீரும் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். அங்கு உணவு கொடுக்க வந்த லாரியை ஆயிரக்கணக்கானோர் சூழ்ந்து கொண்ட காட்சி பலரது மனங்களையும் உலுக்கியுள்ளது.

அக்டோபர் 7-ம் தேதிக்கு பிறகு இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் இதுவரை காஸாவில் 21,360 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முழுமையான விவரம் காணொளியில்...

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)