You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரூ. 2.5 கோடி லாட்டரி பரிசால் குதூகலிக்கும் ரிக்ஷா தொழிலாளி - இவரது திட்டம் என்ன?
89 வயதான குர்தேவ் சிங் தனது வாழ்நாள் முழுவதையும் மோசமான சூழ்நிலையில் கழித்துள்ளார். கூலி வேலை செய்து வந்த இவர் 25 ஆண்டுகளாக ரிக்ஷா ஓட்டி வருகிறார். குர்தேவ் சிங் இப்போது ஒரேநாளில் கோடீஸ்வராகியுள்ளார். இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள லாட்டரியை அவர் வென்றுள்ளார். இது மாநில அரசின் பைசாகி திருநாள் பரிசு.
10, 20 அல்ல கடந்த 50 ஆண்டுகளாகவே அவர் லாட்டரி சீட்டு வாங்குகிறார். இறுதியாக, லாட்டரியில் ஒரு பரிசை அவர் வென்றுள்ளார். இவர் பஞ்சாபில் உள்ள லோஹர் என்ற சிறிய கிராமத்தில் வசித்து வருகிறார்.
இரண்டரை கோடி ரூபாய் வென்ற பிறகும் அவருக்கு பெரிய கனவுகளோ, திட்டங்களோ இல்லை. அவர் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை குடிசை வீட்டிலேயே கழித்துள்ளார், எனவே அவரது கனவுகள் வீடு குறித்தே உள்ளன.
குர்தேவ் சிங் மரங்கள் நடுவதை விரும்புகிறார். சாலையில் மரம் நடுவதை தொடர்ந்து செய்துவருகிறார். தனது வாழ்க்கை போராட்டத்தின் ஒவ்வொரு நாளையும் அவர் நினைவு கூர்கிறார்.
தயாரிப்பு - சுரீந்தர் மன்
படத்தொகுப்பு - சதாஃப் கான்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்