கால்பந்து உலகக் கோப்பை: முதல் சுற்றிலேயே வெளியேறும் கத்தார் - ரசிகர்கள் ஏமாற்றம்

பட மூலாதாரம், Getty Images
கத்தாரில் கால்பந்து உலகக் கோப்பை தொடர் நடைபெற்றுவரும் நிலையில், தொடரை நடத்தும் கத்தார் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த காரணத்தால் முதல் சுற்றிலேயே வெளியேறுவது உறுதியாகியுள்ளது. இது கத்தார் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.
ஏ பிரிவில் உள்ள அனைத்து அணிகளும் இரண்டு போட்டிகளில் மோதியிருக்கும் நிலையில் கடைசி இடத்தைப் பிடித்திருக்கும் அணி என்ற வகையிலும் அடுத்த வரும் போட்டியில் வென்றாலும் முதல் இரு இடங்களைப் பெற முடியாது என்ற அடிப்படையிலும் கத்தார் அணி முதல் சுற்றிலேயே வெளியேற உள்ளது.
உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடத்துவதை பெருமையாகவும், பெருங்கனவாகவும் கொண்டிருக்கும் கத்தார், பல்வேறு தடைகளையும் சர்ச்சைகளையும் கடந்து இந்தத் தொடரை நடத்திக் கொண்டிருக்கிறது.
எனினும், இதைத் தோல்வியாகவோ, ஏமாற்றமாகவோ கருதக்கூடாது என்று அந்த அணியின் மேலாளர் ஃபெலிக்ஸ் சான்செஸ் கூறியுள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



