இந்திய பாரம்பரிய முறைப்படி ஆஸ்திரேலிய காதலனை கரம் பிடித்த குஜராத் பெண்

காணொளிக் குறிப்பு, பாலிவுட் பாடலுக்கு நடனமாடி குதிரையில் வந்து திருமணம் செய்த ஆஸ்திரேலிய இளைஞர்
இந்திய பாரம்பரிய முறைப்படி ஆஸ்திரேலிய காதலனை கரம் பிடித்த குஜராத் பெண்
பிரசுரிக்கப்பட்டது

பாலிவுட் இசைக்கு நடனமாடி பாரம்பரிய குஜராத்தி மாப்பிள்ளை போல் உடையணிந்து குதிரையில் வந்த வெளிநாட்டு இளைஞர், இந்திய முறைப்படி திருமணம் செய்துகொண்டார். குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் நடந்த ஒரு திருமண விழாவில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தோபன், தனது காதலியான நமி நாகரை குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். ஜூனாகத் மாவட்டத்தில் உள்ள மங்ரோலை பூர்வீகமாகக் கொண்ட நமியின் பெற்றோர் ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்து தற்போது அங்கு வசித்து வருகின்றனர். மணப்பெண் நமி, ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்தவர். நமியும் தோபனும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தபோது, நமியின் தந்தை திகன்பாய் அவர்களிடம் குஜராத்தில் உள்ள தனது சொந்த ஊரில் பாரம்பரிய இந்து முறைப்படி, திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். இருவரும் அந்த யோசனையை ஏற்றுக்கொண்டனர். தோபனின் குடும்பமும் இதற்கு ஒப்புக்கொள்ள திருமணத்திற்காக அனைவரும் இந்தியாவுக்கு வந்தனர். தனியார் ரிசார்ட்டில் நடந்த திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர். இந்த திருமணத்தில் கலந்து கொள்வதற்காக ஆஸ்திரேலியாவில் இருந்து தோபனின் குடும்பத்தைச் சேர்ந்த 20 பேர் குஜராத் வந்தனர்.

குஜராத் பெண்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: