இலங்கையில் ஆற்றுக்குள் விழுந்த பேருந்து; 10 பேர் பலி - தப்பித்த பயணி கண்ட காட்சிகள்

இலங்கையில் ஆற்றுக்குள் விழுந்த பேருந்து; 10 பேர் பலி - தப்பித்த பயணி கண்ட காட்சிகள்
பிரசுரிக்கப்பட்டது

இலங்கையின் மன்னம்பிட்டி பிரதேசத்திலுள்ள ஆறு ஒன்றில் பேருந்து ஒன்று விழுந்து நேற்று இரவு விபத்துக்குள்ளானதில் 10 பேர் மரணமடைந்தனர்.

பொலநறுவை மாவட்டம் - கதுருவெல பிரதேசத்திலிருந்து கல்முனை நகரம் நோக்கிப் புறப்பட்ட குறித்த பேரூந்து, மன்னம்பிட்டி 'கொட்டலிய' பாலத்திலிருந்து விலகி ஆற்றில் வீழ்ந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது.

கதுருவெல பகுதியிலிருந்து நேற்று இரவு புறப்பட்ட இந்த பேரூந்து, 7.45 மணியளவில் விபத்துக்குள்ளானதாக, அதில் பயணித்து உயிர் தப்பிய இளைஞர் ஒருவர் கூறினார்.

பேருந்து புறப்பட்டு 15 நிமிடத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ஆற்றில் பேரூந்து வீழ்ந்தவுடன் தாமே முதலில் தப்பித்ததாகவும், பேரூந்தின் ஜன்னல் அருகிலுள்ள இருக்கையில் அமர்ந்து தான் பயணித்தமையினால், தன்னால் பேரூந்தினுள் இருந்து வெளியேற முடிந்ததாகவும் மேற்படி இளைஞர் கூறினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: