மாலத்தீவு நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மோதல் - ஏன்?

காணொளிக் குறிப்பு, மாலத்தீவு நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்குள் மோதல் - ஏன்?
மாலத்தீவு நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மோதல் - ஏன்?
பிரசுரிக்கப்பட்டது

மாலத்தீவில், முகமது முய்சுவின் அரசு சீன சார்பு என்றும், அங்குள்ள எதிர்க்கட்சி இந்தியாவுக்கு ஆதரவானது என்றும் கருதப்படுகிறது. இந்தியாவுடனான உறவு மோசமடைந்து வருவதாக முய்சு அரசை மாலத்தீவு எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

ஞாயிற்றுக்கிழமை, மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவின் அமைச்சரவையில் நான்கு உறுப்பினர்களை சேர்ப்பதற்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பாக மாலத்தீவு நாடாளுமன்றத்தில் மோதல்கள் வெடித்தன.

இந்த வேறுபாடுகள் மிகவும் வளர்ந்ததால், முய்சு அரசின் ஆதரவாளர்களுக்கும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவைத்தலைவர் இருக்கை அருகே சென்று குரல் எழுப்பினர்.

சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலையில் காயம் ஏற்பட்டதுடன் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் அளவு நிலைமை மேலும் மோசமடைந்தது.

நாடாளுமன்றத்தில் நடக்கும் இந்த மோதல் தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

மாலத்தீவு முற்போக்கு கட்சி (பிபிஎம்) மற்றும் மக்கள் தேசிய காங்கிரஸ் மற்றும் (பிஎன்சி) இடையே கூட்டணி உள்ளது. இந்த கூட்டணி தான் ஆட்சியில் உள்ளது.

இந்த கூட்டணி 4 பேரை புதிதாக அமைச்சர்களாக்க விரும்புகிறது. ஆனால் எதிர்க்கட்சிகள் இதை விரும்பவில்லை.

மாலத்தீவின் பிரதான எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயகக் கட்சி (எம்.டி.பி), நான்கு அமைச்சரவை உறுப்பினர்களின் நாடாளுமன்ற ஒப்புதலை நிறுத்தி வைக்க கோரியது.

இதையடுத்து முகமது முய்சு அரசை ஆதரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. நாடாளுமன்ற நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டன.

முழு விவரம் காணொளியில்...

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)