You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
37 வயதில் திரை உலக நட்சத்திரங்களின் நம்பிக்கையை வென்ற லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ் இன்று 37 வயதை எட்டியிருக்கிறார். லோகேஷ் தமது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்து எடுத்துக் கொண்ட படமொன்றை பகிர்ந்துள்ளார்.
மிக பெரிய வசூல் வேட்டையை நடத்திய விக்ரம் திரைப்படத்திற்குப் பிறகு, தற்போது லியோ படத்தை இயக்கிவருகிறார் லோகேஷ் கனகராஜ். மிகக் குறைவான திரைப்படங்களையே இயக்கியிருந்தாலும் லோகேஷ் கனகராஜ் தமிழ்த் திரையுலகில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் மிகப் பெரியது.
2017ஆம் ஆண்டில் சந்தீப் கிஷனும் ஸ்ரீயும் நடித்து மாநகரம் என்ற படம் வெளியானபோது, முதல் சில நாட்களுக்கு அந்தப் படத்தை யாரும் பெரிதாகக் கவனிக்கவில்லை. ஆனால், அவரது பிந்தைய கால வளர்ச்சி மிகப்பெரியதாக இருந்தது.
ஆனால், அந்த வார இறுதியில், அந்த வருடம் வெளியான முக்கியமான படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் எனத் தெரிந்துவிட்டது.
ரஜினிகாந்த், சூர்யா போன்றவர்கள், அந்தப் படத்தைப் பாராட்டினார்கள். அடுத்த வாரம் துவங்கியபோது, அந்தப் படம் ஓடும் திரையரங்குகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கப்பட்டது.
அப்போதுதான் கோலிவுட், 'யாரு இந்த லோகேஷ் கனகராஜ்?' என்று பேச ஆரம்பித்தது. இப்போது அவரது இயக்கத்தில் நடிக்கும் ஆர்வத்தை அதே கோலிவுட் பிரபலங்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்