காணொளி: சுகாதாரத்துறை செயலர் தும்மியதும் ஜோக் அடித்த டிரம்ப்
காணொளி: சுகாதாரத்துறை செயலர் தும்மியதும் ஜோக் அடித்த டிரம்ப்
பிரசுரிக்கப்பட்டது
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது சுகாதாரத்துறை செயலாளர் தும்மியதும் அதிபர் டிரம்ப் நகைச்சுவையாக பேசியுள்ளார்.
அவர் தும்மியதும் "கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும், பாபி." என்றார்.
பின், "இப்போது எனக்கு கோவிட் வந்திருக்காது என நினைக்கிறேன். உங்களிடம் பேக்ஸ்லோவிட் (கோவிட் மருந்து) உள்ளதா?" எனக் கேட்டார்.
அதற்கு அவர் தலையசைத்ததும் அவரிடம் பேக்ஸ்லோவிட் இருக்கிறதாம் எனக் கூறினார்.
உடனே, அவரைப் பார்த்து "எனக்கு உடனே ஒரு பேக்ஸ்லோவிட் கொடுங்கள்." என நகைச்சுவையாக கூறினார்.
இதனால் அரங்கத்தில் சிரிப்பலை ஏற்பட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.



