You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: கரூர் வழக்கில் மோசடி உறுதியானால் என்ன ஆகும்? -வழக்கறிஞர் வில்சன் பதில்
கரூர் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் வழக்கில் உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.
இது தொடர்பாக மூத்த வழக்கறிஞரும் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினருமான வில்சன், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 2 பேர் மோசடி புகார் அளித்தும் உச்சநீதிமன்றம் ஏன் அதை கருத்தில் கொள்ளவில்லை என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், "இன்றைய வழக்கின்போது 2 பேரும் வீடியோ கால் மூலம் ஆஜராகினர். நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகுதான் இவர்கள் புகாரை முன்வைத்தனர். அதனால்தான் நீதிமன்றம் மனுவாக தாக்கல் செய்யுங்கள், விசாரணையில் மோசடி என தெரிந்தால் நடவடிக்கை எடுப்போம் எனக் கூறியது" என்றார்.
முழு விவரம் காணொளியில்..
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு