You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டிமான்டி காலனி 2 ஊடக விமர்சனம்: முதல் பாகத்திற்கு நிகராக திகில் கிளப்பியதா?
கடந்த 2015-ஆம் ஆண்டு வெளிவந்த ‘டிமான்டி காலனி’ திரைப்படம் ரசிகர்களின் பரவலான வரவேற்பைப் பெற்றிருந்தது. சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கும் ஒரு காலனியில் உள்ள பேய்க்கதைளால் சூழப்பட்ட ஒரு வீட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த அப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார்.
அப்படத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக், சனந்த், அபிஷேக் ஜோசஃப் ஜார்ஜ் ஆகியோர் நடித்திருந்தனர். அப்படம் திகில் பட ரசிகர்களால் பெரிதும் கவனிக்கப்பட்டது.
இப்போது அப்படத்தின் இரண்டாம் பாகமான ‘டிமான்டி காலனி - 2’ வெளிவந்திருக்கிறது. முதல் படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்துதான் இப்படத்தையும் இயக்கியுள்ளார். அருள்நிதி மீண்டும் முக்கியக் கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். அவருடன், பிரியா பவானி சங்கர், அர்ச்சனா ரவிச்சந்திரன், அருண் பாண்டியன் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான டிமான்டி காலனி 2 எப்படி இருக்கிறது? முதல் பாகத்தைப் போலவே இதுவும் திகில் கிளப்பியதா? ஊடக விமர்சனங்கள் என்ன சொல்கின்றன?
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)