இலங்கையில் 4 ஆண்டுகளாக காட்டுக்குள் மறைந்து வாழ்ந்த முன்னாள் போராளி (காணொளி)

காணொளிக் குறிப்பு, இலங்கையில் 4 ஆண்டுகளாக காட்டுக்குள் மறைந்து வாழ்ந்த முன்னாள் போராளி
இலங்கையில் 4 ஆண்டுகளாக காட்டுக்குள் மறைந்து வாழ்ந்த முன்னாள் போராளி (காணொளி)
பிரசுரிக்கப்பட்டது

நான்கு ஆண்டுகளாக காட்டு பகுதிக்குள் தனிமையில் வாழ்ந்து வந்த தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி ஒருவர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேசத்திற்குட்பட்ட தாந்தாமலை காட்டுப் பகுதியிலேயே இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக வாழ்ந்து வந்துள்ளார். குடும்பத்தினரால் கைவிடப்பட்டு, மனநலம் குன்றிய நிலையிலேயே அவர் காட்டுப் பகுதியில் வாழ்ந்து வந்ததாக ஜனநாயக போராளிகள் கட்சியின் உப தலைவர் என்.நகுலேஸ், பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

தாந்தாமலை பகுதியின் றெட்பாணா எனும் கிராமத்திற்கு அண்மித்த பகுதியிலுள்ள காட்டில் கொட்டகை ஒன்றை அமைத்து இவர் இதுவரை காலம் வாழ்ந்து வந்துள்ளார். இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக காட்டில் பெரும்பாலும் பழங்களை உட்கொண்டே வாழ்ந்து வந்துள்ளதாக தெரிய வருகின்றது.

சில சந்தர்ப்பங்களில் காட்டு பகுதியை அண்மித்துள்ள பிரதேசத்தில் வாழும் மக்கள், ஏதாவது உணவு பொருட்களை இவருக்கு வழங்கி வந்துள்ளனர். இவ்வாறு வழங்கப்படும் உணவுப் பொருட்களை கொட்டகைக்கு கொண்டு சென்று, அவற்றை கொண்டு சுகாதாரமற்ற வகையில் உணவுகளை சமைத்து உட்கொண்டுள்ளதாக என்.நகுலேஸ் தெரிவிக்கின்றார். நான்கு வருட காலமாக குளிக்காமல், முடிவெட்டாமல், அதிக நித்திரையின்றி, சுகாதார சீர்கேட்டுக்கு மத்தியிலேயே இவர் வாழ்ந்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

காட்டுக்குள் வசித்துவந்த தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி மீட்பு

பட மூலாதாரம், N.NAGULESH

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: