எப்ஸ்டீன் ஆவணங்களில் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள்? - காணொளி
இறந்துபோன பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் உடன் பிரபலமான நபர்கள் இருப்பது உள்ளிட்ட புகைப்படங்கள் அடங்கிய எப்ஸ்டீன் ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை வெளியிட தொடங்கியுள்ளது.
அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், எப்ஸ்டீன் ஓடு சேர்ந்து குற்றத்திட்டம் தீட்டிய ஜிஸ்லெய்ன் மேக்ஸ்வெல் உடன் இருக்கும் புகைப்படமும் இதில் உள்ளது.
இசைக்கலைஞர்கள் மிக் ஜேக்கர், மைக்கேல் ஜேக்சன், டயானா ராஸ் மற்றும் நடிகர் க்றிஸ் டக்கர் ஆகியோரின் புகைப்படங்களும் உள்ளன.
புகைப்படங்களில் உள்ள சிலரின் முகங்களை நீதித்துறை மறைத்துள்ளது.
எப்ஸ்டீன் ஆவணங்களில் பெயரோ அல்லது புகைப்படமோ இடம்பெற்றிருப்பதாலேயே சம்பந்தப்பட்ட நபர் குற்றம் செய்தார் என கூற முடியாது.
முன்னாள் அதிபர் கிளிண்டன் கூறுகையில், தனக்கு எதுவும் தெரியாது என்றும் எப்ஸ்டீன் செய்த குற்றங்கள் வெளிச்சத்துக்கு வரும் முன்னே அவருடனான தொடர்பை துண்டித்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.
ஒரு புகைப்படம் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ முகம் மறைக்கப்பட்ட ஐந்து பேரின் மீது படுத்திருப்பது போன்று உள்ளது.
ஆண்ட்ரூ மவுன்ட்பேட்டன் வின்ஸ்டர் தான் எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான Virginia Giuffreவை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மருத்துவருகிறார். மேலும், எப்ஸ்டீன் உடனான தொடர்பு மூலம் குற்றங்கள் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார்.
ஆனால், வெளியிடப்பட்ட ஆவணங்களில் அதிபர் டிரம்பின் புகைப்படம் அதிகளவில் இல்லை.
90கள் மற்றும் 2000ங்களின் தொடக்கத்தில் அதிபர் டிரம்ப் எப்ஸ்டீன் உடன் தொடர்பில் இருந்தார். ஆனால், இந்த புகைப்படம் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. அதோடு, ஒரு மேஜை drawer-ல் டிரம்பின் மேலும் சில புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்ததின் புகைப்படங்களும் வெளியாகின.
டிரம்ப் தவறு செய்தார் என எந்த குற்றச்சாட்டும் இல்லை. எப்ஸ்டீன் முதல் முறையாக கைது செய்யப்பட்டதற்கு முன்பே 2004 காலகட்டத்தில் அவருடன் சண்டை ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக டிரம்ப் கூறியுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



