'இஸ்ரேல் இல்லாவிட்டால் மத்திய கிழக்குக்கு ஆபத்து' - நெதன்யாகு

காணொளிக் குறிப்பு, 'இஸ்ரேல் இல்லாவிட்டால் மத்திய கிழக்குக்கு ஆபத்து' - நெதன்யாகு
'இஸ்ரேல் இல்லாவிட்டால் மத்திய கிழக்குக்கு ஆபத்து' - நெதன்யாகு
பிரசுரிக்கப்பட்டது

இஸ்ரேலை அழிக்காமல் மத்திய கிழக்கை கைப்பற்ற முடியாது. இஸ்ரேல் இல்லையென்றால், மத்திய கிழக்கு முற்றிலுமாக நொறுங்கிவிடும் என பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று (ஜூன் 30) பேசுகையில், "இரான் அழிவுக்கான மூன்று வழிகளை வடிவமைத்துள்ளது. முதலாவதாக, இஸ்ரேலை இரான் ஆதரவு அமைப்புகள் மூலம் சுற்றி வளைக்கத் திட்டம் தீட்டியது. இரண்டாவதாக, இஸ்ரேலை ஏவுகணை அச்சுறுத்தல் மூலம் அழிக்கத் திட்டமிட்டது. மூன்றாவதாக, அணுஆயுதம் மூலம் இஸ்ரேலை அழிக்கத் திட்டம் தீட்டியது.

இரானில் இந்த ஆட்சி அந்த அடிப்படையில்தான் உருவானது. அதுமட்டுமே இஸ்ரேலை அழிப்பதற்கான காரணம் இல்லை. இஸ்ரேல் மட்டுமே இரானின் இலக்கும் இல்லை. இரான் தனது இலக்கை அடைய வேண்டுமென்றால் முதலில் இஸ்ரேலை அழிக்க வேண்டும்.

இஸ்ரேலை அழிக்காமல் மத்திய கிழக்கை கைப்பற்ற முடியாது. இஸ்ரேல் இல்லையென்றால், மத்திய கிழக்கு முற்றிலுமாக நொறுங்கிவிடும்." என தெரிவித்தார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு