பிகாரில் மதம் பிடித்த யானை மீதிருந்த இரு சகோதரிகள் என்ன ஆயினர்? காணொளி

பிகாரில் மதம் பிடித்த யானை மீதிருந்த இரு சகோதரிகள் என்ன ஆயினர்? காணொளி
பிரசுரிக்கப்பட்டது

கடந்த சில நாட்களாக யானை வாகனங்களை தூக்கி வீசம் வீடியோ வைரலாகி வருகிறது. யானைகள் பொதுவாக அமைதியான விலங்குகள். ஆனால், அது கோபமடைந்தால் இது போன்று ஆக்ரோஷ்மாக நடந்து கொள்ளும். இந்த வீடியோ, பிகார் மாநிலம் புய்லி கிராமத்தில் அக்டோபர் 12ம் தேதி நடைபெற்ற மத ஊர்வலத்தின் போது பதிவு செய்யப்பட்டது.

அதில் யானையின் முதுகில் சவாரி செய்ய சிறுமிகள் ஏறியவுடன் யானை கோபமடைந்தது. இதனால், தெருவில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே, யானை காட்டை நோக்கி ஓடியது. கோபமடைந்த யானையின் முதுகில் ஐந்து மணி நேரம் இந்த சிறுமிகள் அமர்ந்திருந்தனர்.

அவர்களுடன் இரண்டு யானை பாகன் இருந்தனர், அதனால்தான் இந்த சிறுமிகள் கடுமையான பாதிப்பிலிருந்து தப்பினர். ஆனால் கட்டுப்பாடற்ற யானையின் மேல் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக அவர்கள் காட்டிய தைரியத்திற்காக அவர்கள் பாராட்டப்படுகிறார்கள்.

இந்த சம்பவத்தின் போது யானை மிதித்ததில் ஒருவர் உயிரிழந்தார். தற்போது, உள்ளூர் நிர்வாகம், அகடா ஜூலூஸ் அமைப்பை சேர்ந்த 21 அமைப்பாளர்கள் மற்றும் 200 நபர்கள் மீது யெக்மா காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது.

மேலும் விவரங்கள் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)