You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
போலாந்து: போரினால் யுக்ரேனிலிருந்து புலம்பெயர்ந்த பிள்ளைகளுக்காக நடத்தப்படும் சிறப்புப் பள்ளி
ரஷ்ய- யுக்ரேன் போரின் காரணமாக யுக்ரேனிலிருந்து குடும்பம் மற்றும் வளர்ப்புப் பிராணிகளுடன் வெளியேறிய 16 வயதான விக்டோரியா, போலாந்து நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளார்.
ரஷ்ய படையெடுப்பிற்கு பிறகு 10 லட்சம் யுக்ரேனியர்களுக்கு போலாந்து அடைக்கலம் கொடுத்துள்ளது.
புதிய நாட்டில் குடியேறுவதால் ஒரு புதிய பள்ளியைத் தேட வேண்டிய சூழல் விக்டோரியாவுக்கு ஏற்பட்டது. பிறகு, போலாந்து நாட்டின் தலைநகர் வார்சாவில் ஒரு யுக்ரேனியன் பள்ளி திறக்கப்படுவது பற்றி அவரது குடும்பத்தினர் அறிந்துகொண்டார்கள்.
“போலந்து மற்றும் யுக்ரேனிய பாடத்திட்டங்கள் என இரண்டு கல்வி முறைகளில் படிக்கிறோம். இங்கு எல்லாப் பாடங்களுக்கும் இரண்டு மொழிகளில் வகுப்புகள் எடுக்கப்படும். இறுதியாக போலிஷ்- யுக்ரேனியன் என இரண்டு சான்றிதழ்களும் கிடைக்கும்.” என்கிறார் விக்டோரியா.
இந்தப் பள்ளியில் படிக்கும் பலர் ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட யுக்ரேன் பகுதிகளில் இருந்து வந்தவர்கள். ரஷ்ய படையெடுப்பின் காரணமாக 10 மில்லியன் மக்கள் யுக்ரேனை விட்டு வெளியேறிவிட்டனர் என ஐ.நா தெரிவிக்கிறது. அதில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள்.
‘Save the Children’ என்ற அமைப்பின் சமீபத்திய கணக்கெடுப்புபடி, 90% யுக்ரேனிய பிள்ளைகள் மன அழுத்தத்தில் உள்ளனர். 70% க்கும் அதிகமானோர் பாதுகாப்பற்ற நிலையை அல்லது பயத்தை உணர்கிறார்கள்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)