காணொளி : 1,000 சதுர அடி பரப்புடைய மிகப்பெரிய வலையில் பல லட்சம் சிலந்திகள்

காணொளி : 1,000 சதுர அடி பரப்புடைய மிகப்பெரிய வலையில் பல லட்சம் சிலந்திகள்
பிரசுரிக்கப்பட்டது

ஆயிரம் சதுர அடி பரப்பளவு உள்ள இந்த சிலந்தி வலையில் லட்சக்கணக்கான சிலந்திகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

இது இரண்டு வகையான சிலந்திகளின் தாயகமாகும்.

கடந்த அக்டோபரில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வறிக்கையில், இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே மிகப்பெரிய சிலந்தி வலை இதுவாக இருக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குகை ஆய்வாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று, கிரேக்க-அல்பேனிய எல்லையைத் தாண்டி அமைந்துள்ள சல்பர் குகையில் 2022 ஆம் ஆண்டு இந்த சிலந்தி வலையை கண்டுபிடித்தனர், இதனை ஒரு அசாதாரணமான கண்டுபிடிப்பு என்றும் அவர்கள் விவரித்துள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு