பெருவில் பெரிய தலை, 3 விரல்களுடன் கிடைத்த உயிரினம் ஏலியனா?
பெரிய தலை, மூன்று விரல்களுடன் பெரு நாட்டில் கிடைத்துள்ள உடல் மனிதனுடையதும் இல்லை, விலங்குகள் எதனுடையதும் இல்லை எனக் கூறப்படுகிறது.
செப்டம்பர் 12ஆம் தேதி மெக்சிகோவில் காட்சிப்படுத்தப்பட்ட இரண்டு உடல் எச்சங்கள் ஏலியன்களின் உடலா என பெரும் விவாதம் எழுந்துள்ளது.
மெக்சிவில் முதன்முறையாக நாடாளுமன்ற அவையில் ஒரு பொது விசாரணையின்போது இந்த உடல் எச்சங்கள் முன்வைக்கப்பட்டன. பறக்கும் தட்டு என உலகம் முழுவதும் அறியப்படும், அடையாளம் அறியப்படாத பொருட்கள் மற்றும் முரண்பாடான நிகழ்வுகள் தொடர்பான விசாரணையினபோது இந்த உடல் எச்சங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்த உடல்கள் உயரத்தில் சிறியதாக உள்ளன. இரு கைகளிலும் தலா 3 விரல்கள் மட்டுமே உள்ளன. தலையின் பின் பகுதி பெரிதாக இருக்கிறது.
இந்த இரு உடல்களும் 2017இல் பெருவில் இருந்து கண்டெடுக்கப்பட்டவை. இவை இரண்டும் முறையே 700 மற்றும் 1,800 ஆண்டுகள் பழமையானவை எனக் கூறப்படுகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



