சாதி அரசியல் பேசும் 'மாமன்னன்' ஒரு கலையாக வெற்றி பெற்றதா?
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், ஃபஹத் ஃபாசில் நடித்து வெளியான மாமன்னன் திரைப்படம் தமிழகத்தில் சினிமா என்ற வகையிலும் அரசியல் ரீதியாகவும் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
அதற்கு என்ன காரணம்?
மாமன்னன் திரைப்படம் ஜூன் 29ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியானது. மாரி செல்வராஜ் இதற்கு முன்பாக இயக்கிய பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய திரைப்படங்கள் வெகுவாகக் கவனிக்கப்பட்ட நிலையில், இந்தப் படமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

பட மூலாதாரம், RED GIANT MOVIES
இந்தப் படத்தின் நாயகனான உதயநிதி ஸ்டாலின் தற்போது அமைச்சராகப் பதவியேற்றிருப்பதால், மாமன்னன் படமே தனது கடைசித் திரைப்படமாக இருக்கும் என்றும் கூறியிருந்தார்.
இந்தப் படம் தொடர்பான முதல் அறிவிப்பு வெளியானபோதே வடிவேலுவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால், படம் தொடர்பான ஆர்வம் இன்னமும் அதிகரித்தது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



